294

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "இரட்டுற மொழிதலும் எய்தற் பாற்றே."                       - மா. 227 

    "அவநுதி என்ப ஆய்மெய் மறுத்துமற்று
     இவறிய ஒன்றனை ஏற்றி இயம்பலே;
     உருவகம் கூட்டின் ஒண்சிறப் பாகும்."                   - தொ. வி. 345 

    "கோதறு சிறப்பினும் குணத்தினும் பொருளினும்
     உண்மையை விலக்கிவே றொன்றாய் அறைகுவது
     அவநுதி என்மனார் அறிந்திசி னோரே."              - மு. வீ. பொ. 93 

    "அற்றொரு தன்மை ஆரோ பிப்பான்
     மற்றொரு தன்மை மறுத்திடல் ஒழிப்பாம்
     அதுவே அறுவகைத்து ஆகும் என்ப."                         - ச. 19 

    "அவற்றுள்,
     அல்பொருள் தன்மர் ஆரோ பித்தற்கு
     உபமேய இயல்பை ஒழித்தல்வெற் றொழிப்பே."                 - ச. 20 

    "கழறிய அவ்வணி காரணத் தோடும்
     கூடி வருதல் காரண ஒழிப்பே."                               - ச. 21 

    "புனைவுளி யிடத்துப் புகட்ட மற்றொரு
     பொருளியல் மறுத்தல் வேறுபாட் டொழிப்பே."                 - ச. 22 

    "ஒன்றைமற் றொன்றென்று உட்கொளூ உம்மருளை
     உண்மை கூறி ஒழிப்பது மயக்கே."                            - ச. 23 

    "வினவிய தம்சொல் மெய்மையை மறத்-து
     வேறொரு பொருளை விளைப்பதுஅச் சொற்கே
     வல்லோர் ஒழிப்பென வகுத்தனர் புவவர்."                     - ச. 24 

    "பெயர்முதல் சொல்லால் பெரிதும் வருணியத்து
     இயல்மறுத்து உரைத்தல் வஞ்சக ஒழிப்பே."                    - ச. 25 

    "மறுதரு மந்தனை ஆராபித் தற்கிட மாம்பொருளில்
     உறுதரு மத்தை மறைத்தால் ஆதுவெற் றொழிப்பு."            - குவ. 15 

    "முற்கூ றியவொழிப்பு ஏதுவி னோடு முடிந்திடில்அ
     திற்கா ரணவொழிப் பென்பேர் உறும்."                       - குவ. 16