298

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 நின்று பலபொருள் படும் செம்மொழிச் சிலேடையும், ஒரு வகையான் நின்ற
 சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்துப் பல பொருள் கொள்ளப்படும்
 பிரிமொழிச் சிலேடையும் என இரண்டு கூறுபடும் என்றவாறு.

     "தான்" என்ற மிகையானே, தொடர்சொல்லே அன்றி ஒருசொல்லே
 பலபொருள்பெற்றி தெரிதரவரினும்,அவ்வலங்காரமாம் எனக்கொள்க.

     [இவ்வணி பலபொருள் சொற்றொடரணி எனவும் கூறப்பெறும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 76, 77

    "செப்பும் சிலேடை ஒருதிறம் சேர்சொல் பலபொருளை
     ஒப்ப உணர்த்தல் ஒருவினை பலவினை ஓங்குமுரண்
     துப்புறழ் வாயின் சொலாய்!நிய மத்தோ டநியமமும்
     தப்பில் விரோத் துடனவி ரோதமும் சாற்றினரே."              - வீ. 172 

    "உயர்வும் ஒருமொழி தொடர்மொழி செய்யுளின்
     இயல்பினும் திரிபினும் இயன்றுபல் பொருளைத்
     தருபெயர் வினையில் சார்வது சிலேடை."                    - மா. 146 

    "அவற்றுள்,
     இயல்பு செம்மொழி திரிபுபிரி மொழியே."                    - மா. 147 

    "இவைஇனி விரிப்பன வாமெவற் றினும்வரும்."                 - மா. 148 

    "ஒன்று பலமுரண் ஒன்றிய வினையே
     நியமம் நியம விலக்கு விரோதம்
     அவிரோ தத்துடன் அதன்விரி எழுள."                      - மா. 149 

    "அவற்றுள்,
     ஒருவினை கொள்வது ஒருவினைச் சிலேடை."                 - மா. 150 

    "பலவினை கொள்வது பலவினைச் சிலேடை."                  - மா. 151