என வரும். பிள்ளையார்மேல் செல்லுங்கால், பொன் - பொலிவு; பணை -
பருத்தல்; முகம் - வதனம்; கோடு - கொம்பு; நாகம் - யானை; வம்பு - கச்சு;
உறுதல் - கட்டுதல்; ஓடை - பட்டம்.
மலைமேல் செல்லுங்கால், பொன் - கனகம்; பணை - மூங்கில்; முகம் - பக்கம்;
கோடு - சிகரம்; நாகம் - மலை; வம்பு - மணம்; உறுதல் - உண்டாதல்;
ஒடை - வாவி.
[இப்பாடல் விநாயகனுக்கும் மலைக்கும் சிலேடை. அழகிய பொலிவினை உடைய
பருத்த முகத்தின்கண்ணே திண்ணிய கொம்பினை உடைத்தாய் அழகுபொருந்திய
யானையாகிய விநாயகன், கச்சோடு கட்டிய பட்டம் விரிந்து விளங்க, முடிமீது
அழகுசெய்யும் ஆகாயகங்கையும் பிறைச்சந்திரனும் விளங்க, தன்னைக்குறித்துத்
தவம்செய்வார்க்கு உயர்ந்த பதவிகளை வழங்கி இன்பம் தருவான் - எனவும்,
மலை, தன்மீது அழகிய பொன்னையும் மூங்கில்களையும் கொண்டு நீர் ஓடைகள்
தன்னிடத்து மலர்களோடு விளங்கத் தன்னிடம் கங்கை முதலிய நதிகளும் சந்திரனும்
தோன்ற, தன்னிடத்தமர்ந்து தவம் செய்பவருக்கு மன அமைதி முதலிய இன்பம்
நலகும் - எனவும் அமைந்த இப்பாடலில், "இன்பம் தரும்" என்ற ஒரே முடிக்கும்
சொல்லையே சிலேடையான் அமைந்த எழுவாயாகிய இரண்டும் கொண்டு
முடிந்தமை காண்க.]