என வரும். குயில்குரல்மேல் செல்லுங்கால், மது - நறவு; மருவி - புக்கு; செந்நீன்மை
- கோடாத்தன்மை; மேவலார் - பிரிந்தோர்.
கண்ணின்மேல் செல்லுங்கால், மது - கள்; செவி மருவி - செவி அளவும் சென்று;
செந்நீர்மை - சிவந்த கண்ணிற்குக் குளிர்ச்சி; மேவலார் - புணரும் தலைவர்.
[இப்பாடல் குயிலின் குரலுக்கும் மகளிர் கண்களுக்கும் சிலேடை. குறைவற்ற
தேனை உண்ட களிப்பு மிகுதலால் நீண்டு நம்காதுகளில் புக்கு, இசை கோடாத்
தன்மை பொருந்திக் குயிலிசை துணையைப் பிரிந்தவர் இனிய உயிரைத் தாக்குகிறது.
குறைவற்ற கள்ளைக் குடித்த களிப்பு, மயக்கம் தருவதால் சற்றுச்செந்நிறம்பெற்று,
செவி அளவும்சென்று நீண்டு, மின்னலை ஒத்த நுண்ணிடையாருடைய மெல்லிய
கண்கள் அவர்களைப் புணரும் தலைவர்களின் உயிரைக் காதலால் கவர்ச்சிக்கின்றன.
இப்பாடலில், நீண்டு, மருவி, தாங்கி, ஈர்கின்றன என்ற பலவினைகள் முடிக்குஞ்
செற்களாதல் காண்க.]