306

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     விரோதச் சிலேடை வருமாறு :

    "விச்சா தரன்எனினும் அந்தரத்து மேவானால்;
     அச்சுத னேனும்அம் மாயன்அலன்; - நிச்ச
     நிறைவான் கலையான் அகளங்கன்; நீதி
     இறையான், அநகன்; எங் கோ"

 என வரும். விச்சாதரன் - தேவனும் சிலேடை. விச்சாதரன் அந்தரத்தில் மேவுவான்;
 ஆனால் சோழன் அந்தரத்தில் மேவான். அச்சுதன் மாயன்; ஆனான் சோழன் மாயன்
 அல்லன். மதியான் களங்கன்; ஆனால் சோழன் அகளங்கன். சிவபெருமான் நகன்;
 ஆனால் சோழன் அநகன்.

     இவ்வாறு சிலேடைப்பொருளான் சோழமன்னன் - விச்சாதரன், திருமால்,
 சந்திரன், சிபெருமான் ஆகியோரின் மாறுபட்டிருப்பதாகக் கூறுதல் காண்.]

     அவிரோதச் சிலேடை வருமாறு :

    "சோதி இரவி, கரத்தான் இரவு ஒழிக்கும்;
     மாதிடத்தான், மன்மதனை மாறழிக்கும்;-மீதா
     அநகமதி தோற்றிக் குமுதம் அளிக்கும்;
     தநதன், இருநிதிக்கோன் தான்"

 என வரும். சோதி - ஒளியும், புகழும்; இரவி - சூரியனும், சோழனும்; கரம் - கதிரும்,
 கையும்; இரவு - இருளும்,