என வரும். பிறவும் வந்துழிக்கண் கொள்க. (54)
[மன்மதனுக்கு யானை, தேர், குதிரை, காலாள் என்ற நால் வகைப் படைகளுள்
ஒன்றும் இல்லை; தனக்கும் வடிவம் இன்று; அவன் எடுத்த வில்லோ கரும்புவில்;
அம்புகளோ மலர் அம்புகள்; இந்நிலையில் அவள் மூன்று உலகங்களையும் வென்று
தன் வெற்றிச் சுவடு, அவ்வுலகில் என்றும் இருக்குமாறு செய்துவிட்டான் - என்ற
இப்பாடலில்,
போருக்கு வேண்டிய அங்கங்களாகிய வலியஉடல், நால்வகைப் படைகள்,
உறுதியான வில், கூர்மையான அம்புகள் முதலியன இல்லாமலேயே மன்மதன்
மூன்று உலகங்களையும் வென்ற செய்தி கூறப்படுதல் உறுப்புக்
குறைவிசேடமாதல் அறிக.] 54