[பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்வர் என்பதனையும் சிறியோர்
பொறுக்க மாட்டாமல் மனம் புழுங்குவர் என்பதனையும் அறிவுறுத்தி, கதிரவன்
ஒளியால் அழகுறும்போது தாமரை மலரவும் குமுதமலர்கள் கூம்பின - என்ற
இப்பாடலில்,
தாமரை குமுதம் என்ற இவற்றின்கண் இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி உலக
மக்களுக்குச் சான்றோர், கீழோர் ஆகியவர் திறத்தை அறிவிப்பதாகக் கூறப்பட்டமை
காண்க.
பிறர் செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்தலைப் பொங்கு ஒளியோன் வீறு
எய்தும்போது செங்கமலம் மெய்மலர்ந்து அறிவுறுத்தது என்பது நற்பொருள்
காட்சியாம்.]