324
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
புணர்நிலையணி
679. வினைபண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர மொழிவது புணர்நிலை ஆகும்".
இது நிறுத்தமுறையானே புணர்நிலை அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : வினையானும் பண்பானும் இரண்டு பொருளுக்கு ஒன்றே பொருந்தச் சொல்வது புணர்நிலை என்னும் அலங்காரமாம் என்றவாறு,
ஒன்றே மொழிவது என்று ஒழியாது "புணர மொழி வது" என்ற மிகையானே, இவ்வலங்காரம் ஒருவினை ஒடுச்சொல் பொருள்படவே வருதல் கொள்க.
[இவ்வணி ஒருங்கியல் எனவும், உடன் நிகழ்ச்சியணி எனவும், உடன் நவிற்சியணி எனவும் கூறப்பெறும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 86
"துப்பார் ஒருங்கியல் தூய வினைபண்பு இரண்டுபொருட்கு ஒப்பா ஒரு சொல்லு வைப்பது." - வி. 175
"நன்றிகொள் பண்பு வினைஇவை காலத்து ஒன்ற இருபொருட்கு உரைப்பது புணர்நிலை." - மா. 206
"விழுமிய வினையினும் குணத்தினும் இருபொருட்கு ஒருபுணர் புணர்ப்பது புணர்நிலை யாகும்." - மு. வீ. பொ. 102
"சீரியோர் உள்மகிழ் செயும் உடன் நிகழ்வை உரைப்பது தனைஉடன் நிகழ்ச்சி என்ப." - ச. 46
"உணர்ந்தோர் உவக்க உடன்நிகழ்வு ஓதல் உடன்நவிற்சி." - குவ. அ. 21]