அணியியல் - புணர்நிலையணி

325 

     அவற்றுள், வினைப்புணர்நிலை அலங்காரம் வருமாறு :

    "வேண்டுருவம் கொண்டு, கருகி, வெளிபரந்து,
     நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த - ஆண்தகையோர்
     மேவல் விரும்பும் பெருநசையால் மெல்ஆவி
     காவல் புரிந்திருந்தோர் கண்"

 என வரும்.

     [கார்காலம் வந்த அளவில், ஆண்மைக்குரிய தகைமையினால் தம்மைப்
 பிரிந்து பொருள் தேடச் சென்ற தம் தலைவர் தம்மை மீண்டும் வந்து அடைதல்
 வேண்டும் என்ற பெருவிருப்பினால் பிரிந்து போய்க்கொண்டிருந்த உயிரை
 உடலைவிட்டு நீங்காமல் பாதுகாத்திருந்த தலைவியருடைய கண்கள், பலவகை
 வடிவங் கொண்டு கறுத்து வானம் எங்கும் பரந்து நீண்ட மேகங்களோடு
 நீரைச் சொரிந்தன - என்ற இப்பாடலில்,

     கண் முகிலுடனே "நீர் பொழிந்த" என இருபொருள்கள் ஒரே வினையை
  முடிக்குஞ் சொல்லாகக் கொண்டமை காண்.]

     பண்புப்புணர்நிலை அலங்காரம் வருமாறு :

    "பூங்காவில் புள்ஒடுங்கும் புன்மாலைப் போதுடனே,
     நீங்காத வெம்மையவாய் நீண்டனவால், - தாம்காதல்
     வைக்கும் துணைவர் வரும்அவதி பார்த்து, ஆவி
     உய்க்கும் தமியோர் உயிர்"

 என வரும்.                                                         (60) 

     [தாம் அன்புவைத்த துணைவர் பருவங்குறித்துப் பிரிந்து சென்றராக, அவர்
 வரும் காலத்தை எதிர்நோக்கிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தவராகிய
 தனித்திருந்த நங்கைமாருடைய உயிரும் பூக்கள் நிறைந்த சோலையிலே பறவைகள்
 தங்கள்கூடுகளுக்குச்சென்று தரும் புல்லிய மாலைகாலமும் நீங்காத துயரம் செய்து
 நீண்டு கொண்டிருந்தன - என்ற இப்பாடலில்,