326

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     உயிர், மாலைப்போது என்ற இரண்டும் "நீண்டன" என்ற ஒரே பண்புச்சொல்லைக்
 கொண்டு முடிந்து பொருள் தந்தவாறு காண்க. மாலைநீண்டது என்பது -
 மாலைப்பொழுதின் ஒவ்வொரு கணமும் ஊழிபோலத் தோன்றியது என்பதாம். உயிர்
 நீண்டது என்பது - பிரிதல் துன்பம் தாங்காது உடலைவிட்டுப் போதலை ஒழித்துத்
 தலைவிக்குத் துயரம் செய்து ஒவ்வொரு கணமும் ஊழிபோலக்காட்டி உடலில் உயிர்
 தடுமாறிக் கொண்டிருந்தது என்பது.]                                      60 

பரிவருத்தனையணி

 680. பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே.

     இது நிறுத்தமுறையானே பரிவருத்தனை அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   பொருள் ஒன்றற்கு ஒன்று கொடுத்து ஒன்று கொண்டனவாகச்
 சொல்லுவது பரிவருத்தனை என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இது பரிவருத்தனம் எனவும் மாற்றுநிலையணி எனவும் பரிமாற்றம் எனவும்
  கூறப்படும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 87

    "உயர் பரி மாற்ற மது,
     செப்பார் பொருள் மாறிடல்."                                - வீ. 175 

    "உரியதோர் பொருள் கொடுத்து ஒருபொருள் கோடல்
     பரிவருத் தனையெனப் பகர்ந்தனர் புலவர்."                  - மா. 213 

    "ஒன்றற் கொருபொருள் கொடுத்துஒரு பொருளை
     வாங்கல் பரிவருத் தனமா கும்மே."                   - மு. வீ. பொ.103