அணியியல் - சங்கீரணவணி

329 

சங்கீரணவணி

 682. மொழியப் பட்ட அணிபல தம்முள்
     தழுவ உரைப்பது சங்கீ ரணமே.

     இது நிறுத்தமுறையானே சங்கீரண அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   மேல்சொல்லப்பட்ட அலங்காரங்கள் பலவும் தம்முள் பொருந்த
 உரைப்பது சங்கீரணம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     எனவே, உறுப்பு அனைத்தும் கூடிய கலவை போல்வது ஒரு தன்மைத்தாய்,
 ஒன்றற்கு மிகுதி தோன்றாமல் உரைப்பதாம் என்பதாயிற்று. ஆகவே, இரண்டு அணி
 தம்முள் கூடிவருவனவாக மேல்கூறியன எல்லாம் சங்கீரணம் எனப்படா; என்னை?
 சந்தனத்தோடு கருப்பூரம் விரவினும் சந்தனத்தோடு மான்மதம் விரவினும், சந்தனமும்
 அல்லது, கலவை எனப்படாதவாறுபோல என்று உணர்க.

     [இது விரவியல் எனவும் கூறப்பெறும். இரண்டு அணிகளின் சேர்க்கை சங்கரம்
 என்று மாறனலங்காரம் கூறும்.                                          249 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 89

    "பண்பு தரும்பல் லலங்காரம் சேர்ந்து பயிலுவது
     நண்பு தரும் விரவாம்,"                                     - வீ. 176