இதனுள், "தண்துறைநீர் நின்றதவம்" எனத் தற்குறிப் பேற்றமும், "தவத்தால்"
எனக் கருமக்காரக ஏதுவும், "அளிமருவும்" எனச் சிலேடையும், "புண்டரிகம்
நின் வதனம் போலு" என உவமையும், "உண்டோ முயன்றால் முடியாப்பொருள்"
என வேற்றுப்பொருள் வைப்பும், "உயிர்பருகும்பால் மொழியாய்" எனச் சுவையும்
விரவி வந்தவாறு காண்க. பிறவும் அன்ன. (63)
[பழகியவருடைய உயிரைப்பருகும் பால் போன்ற இனிய சொல்லை உடைய
தலைவியே! தண்ணிய துறையில் நீரில் நின்று செய்த தவத்தினாலே வண்டுகள்
மொய்க்கும் தாமரை கருணை பொருந்திய நின் முகம் போன்ற
தோற்றமுடைத்தாயிற்று. இவ்வுலகில் முயற்சி செய்தால் அடையமுடியாத பொருளே
இல்லை - என்ற இப்பாடலில்,
பல அணிகளும் வந்துள்ளமை காண்க.] 63