அணியியல் - பாவிகவணி

331 

பாவிகவணி

 683. பாவிகம் என்பது காப்பியப் பண்பே.

     இது நிறுத்தமுறையானே பாவிக அலங்காரம் உணர்த்துகின்றது.

     இ-ள் :பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர்நிலைச்
 செய்யுள்திறத்துக் கவியால் கருதிச் செய்யப்படுவதோர் குணமாம். என்றவாறு.

     அஃதாவது அத்தொடர்நிலைச்செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது.

     [ஒரே பாடலில் கொள்ளப்படும் ஏனைய அணிகளின் இது வேறாமாறு காண்க.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 91

    "பாவிகமது நற்கவியின்,
     ஒண்பொருளின் தொடர்காப்பிய முற்றின் உரைபெறுமால்."      - வீ. 176 

    "விளம்பிய காப்பியக் குணங்கள்பா விகமே."                  - மா. 251] 

     வரலாறு :

    "பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப."

    "பொறையின் சிறந்த கவசம் இல்லை,"

    "வாய்மையில் கடியதுஒர் வாளி இல்லை."

 என வரும். இதனுள் என்பன போல்வன தோன்றக் கிடந்தவாறு காண்க.       (64) 

விளக்கம்

     [என்பன போல்வன - இங்குக் குறிப்பிட்டவை போன்ற பொதுப் பண்புகள்.