இ-ள் : சொல்லான் உளதாகிய அணிஎன்று கூறப்படுவது கூறுமிடத்து மடக்கும் அதன்பாற்படும் சித்திரமும் என இருவகைத்தாய் நடக்கும் என்று கூறுவர், அதன்இயல்பை உணர்ந்தோர் என்றவாறு. (65)
விளக்கம்
இச் சொல்லணிகளையும் பேராசிரியர் போற்றுவாரல்லர். இவற்றுள் சித்திரகவி பற்றிஅவர் கூறுவன பின்வருமாறு:
ஆண்டுக் கூறிய மரபு உலகியல் ஆகலான் அவ்வுலகியல் அவ்வாறு ஆதற்குக்காரணம் ஈண்டுக்கூறி செய்யுட்கும் அதுவே காரணம் எனக் கூறினான் என்பது............இன்ன பொருட்கு இன்ன செய்யுள் உரித்து எனவும், இனைப்பகுதியால் பெயர்பெறும் எனவும் மரபு பற்றியே சொல்லப்படும் என்றற்கும், இனி, நிறைமொழிமாந்தர் மறைமொழி போல்வன சில மிறைக்கவி பாடினார் உளர் என்பதேபற்றி (தேவாரம் முதலியவற்றில் ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று முதலியனதேவரைப் பற்றி அமைந்துள்ளன) அல்லாதாரும் அவ்வாறு செய்தல் மரபு அன்றுஎன்றற்கும் இது கூறினான் என்பது. அவை - சக்கரம், சுழிகுளம், கோமூத்திரிகை,ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலை