அணியியல் - சொல்லணி - மடக்கு

337 

     இ-ள்:    எழுத்துக்களது தொகுதி பிறஎழுத்தானும் சொல்லானும் இடைவிடாது
 தாமே பெயர்த்தும் வேறு பொருளை விளைக்குமாயின்அது மடக்கு என்னும் பெயரை
 உடைத்தாம்; அது மடக்கு என்னும் பெயரை உடைத்தாம்;அம்மடக்கு நான்கடிச்
 செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓர்அடிக்கண்ணும் இரண்டடிக்கண்ணும் மூன்றடிக்
 கண்ணும் நான்கடிக் கண்ணும் பொருந்திநடக்கும் என்றவாறு.

     எழுத்துக்களது தொகுதி எனவே, இரண்டு முதலிய எல்லா எழுத்தும் ஆம்
 எனவும், மடக்குஎன்னாது "பெயர்த்தும்" என்ற மிகையானே இடைபிறி தின்றி வருதலே
 அன்றி உளதாயும் வரும்எனவும், நான்கடிச் செய்யுள் என்பது ஆற்றலால் போந்தது
 எனவும் கொள்க.ஓரடிக்கண் வருவன முதலடிக்கண் வருதலும், இரண்டாம் அடிக்கண்
 வருதலும், மூன்றாம்அடிக்கண் வருதலும்,நான்காம் அடிக்கண் வருதலும் எனவாம்.
 அவை முன்னர்க் காட்டுதும்                                           (66)

     ஒத்த நூற்பாக்கள்

முழுதும்- தண்டி 92, 93 

    "குறித்துரை எழுத்தின் கூட்டம் முதன்மொழி
     மறித்தும்ஓர் பொருள்தர மடக்குதல்கே."                     - மா. 232 

    "அதுவே,
     தொடர்பிடை விடாதும் தொடர்பிடை விட்டும்
     அடைவினில் இருமையும் அமைவன வாகியும்
     நடைபெறும் முப்பாற் றெனநவின் றனரே."                   - மா. 233 

     தொன்னூல் விளக்கச் சொல்லணியியல்

    "சொல்லணி மறிநிலை மிகல்எஞ்சல் ஒப்புஎன்று
     ஒல்அணித் தொகுதி ஒருநான் கென்ப."                  - தொ. வி. 303