338

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "மறிநிலை உரிமை மாறுஅணி யாயவை
     குணம்முதல் காரணம் குறிப்புஒழுக்கம் ஐந்தே."                  " 304 

    "பொருள்கோ ளும்மறி நிலைபோல் வனவாம்."                    " 305 

    "சொல்மிக் கணிஎன்ப சொல்மறி தரல்அவை
     மடக்கிசை அந்தாதி அடுக்கென மூன்றே."                       " 314 

    "மடக்கணி ஓர்மொழி மடங்கி வரல்அவை
     இடையிடு முதல்கடை இருவழி மடக்கும்
     இடையிடா மடக்கும் எனநால் வகையே."                        " 315 

    "இசைஅந் தாதியே ஈற்றுச்சொல் மீண்டு
     இசைபெற உருபுவேறு எனினும் இயைதலே."                     " 316 

    "அடுக்கணி ஒருபொருட்கு அடுக்கிய திரிசொல்
     அடுக்கி வைப்பது அடுக்கணி எனப்படும்."                       " 317 

    "எஞ்சணி என்ப எளிதுணர் பலமொழி
     துஞ்சில் சிறப்பில் தோன்றாது ஒழித்தலே."                      " 318 

    "பெயர்வினை உம்மைசொல் பிரிப்புஎன ஒழியிசை
     எதிர்மறை இசைக்குறிப்பு எஞ்சணி பத்தே."                     " 319 

    "ஒப்பணி திரிபுஇயைபு ஒழுகிசை இயைபிசை
     தப்பில் சமமெனத் தரும்நால் வகையே."                        " 320 

    "திரிபுஇயைபு ஒருமொழி சேரியல் உருபும்
     உருபுஒன்று அணைபல உறையும் என்ப."                        " 321 

    "ஒழுகிசை சீர்ஒத்து ஒழுகிய செய்யுள்போல்
     வழுவிய இயற்றமிழ் வருதலும் ஆகும்."                         " 322 

    "இயைபிசை சொல்லுருபு ஈற்றில்ஒத்து ஆதலே."                  " 323 

    "சமமென்ப மாத்திரை தவுதல்வேற் றெழுத்து
     ஒன்றுறல் அன்றி ஒன்றிய சொல்லே
     மற்றவற் றினமாம் மாத்திரைச் சருக்கம்
     திரிபது ஆதி சேர்ந்தன பிறவே."                              " 324 

    "சொல்லணி மறிநிலை ஐந்தும்கோள் எட்டும்
     சொல்மிக் கணிமூன்றும் சொல்லெஞ் சணிபத்தும்
     சொல்லொட் டணிநான்கும் தொகைஆறைந்தே."                 " 325 

    "அக்கரம் மொழிஅடி யாவது மாறிப்
     புணர்ப்பது மறிநிலைப் பொருளா கும்மே."             - மு. வீ. சொ. 2