"அந்த முதலாத் தொடுப்பது அந்தாதி
மடக்காம் என்மனார் மறைஉணர்ந் தோரே." - மு. வீ. சொ. 3
"அதுதான்
ஓரடி முதலா நான்கடி காறும்
சேரும் என்மனார் தெளிந்திசி னோரே," - மு. வீ. சொ. 5
"எழுத்தடி மொழியிடை யிட்டும் இடமாலும்
மாறிமற் றொருபொருள் வந்து விளைவது
மடக்காம் எனப்பெயர் வைக்கப் படுமே." - மு. வீ. சொ.4]
எழுவகை மடக்கு
686. ஆதி1, இடை2,கடை3, ஆதியோடு இடை4,கடை5,
இடையொடு கடை6,முழுது7, எனஎழு வகைத்தே.
இஃது அவ்வாற்றான் அத்துணைத்தாம் என்ற தனையே இவ்வாற்றான் இத்துணைத்தாம் என்கின்றது.
இ-ள் : முற்கூறிய மடக்கு ஆதிமடக்கும், இடை மடக்கும், கடைமடக்கும், ஆதியோடு இடைமடக்கும் ஆதியோடு கடைமடக்கும் இடையொடு கடைமடக்கும், முழுதும் மடக்கும் என எழுவகைப்படும் என்றவாறு. (67)
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்- தண்டி 94
"ஆதியும் ஈறும்இடையும் அடிஒன்றி லேமடக்கும்
ஓதிய பாதங்கள் நான்கினு மாம்ஒரு பாதமுற்றுந்
தீதிய லாமை மடக்கலு முண்டு தெரிந்தவற்றைக்
கோதிய லாமை விகற்பத் தினிலறி கோல்வளையே." - வீ. 179
"ஒன்றா தியவாம் ஒருநான் களவும்
சென்று நடைபெறும் சீர்த்ததற் கடியே." - மா. 254 |
|
|