340

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "முதல்இடை கடையே முதலொடு இடைகடை
     இடையொடு கடைமுழுது எனஎழு வகைத்தே."                 - மா. 255 

    "எழுவாய் அடிஇரண்டு இடைஈரடி முத
     லடிமூன் றாமடி ஆதி யடியொடு
     நான்காம் அடிகடை யீரடி இரண்டடி
     நாலடி யினும்வரும் நாடுங் காலே."                     - மு. வீ. சொ. 6 

    "ஓரடிக் கண்ணொழு கியமடக்கு ஏழாம்
     அவைஅடி ஆதியும் அந்தமும் இடையினும்
     அடிமுதல் இடையினும் கடையினும் முதலினும்
     இடையினும் கடையினும் முதலிடை கடையினும
     மடங்கும் என்மனார் மறைஉணர்ந் தோரே."          - மு. வீ. பொ. 190] 

ஓரடிமடக்கு ஒழிந்த பதினொன்றாவன

 687. ஓரடி ஒழிந்தன தேருங் காலை
      இணைமுதல் விகற்பம் ஏழும் நான்கும்
      அடைவுறு பெற்றியின் அறியத் தோன்றும்.

     இதுவும் அதனையே விரித்து உணர்த்துகின்றது.

     இ-ள் : ஓரடிமடக்கு ஒழிந்தன ஆராயுங்காலத்து, மேல் செய்யுளியலில் கூறப்படும்
 இணைமுதலிய விகற்பத் தொடை ஏழும் நான்கும் ஆகிய பதினொன்றும் போல
 விளங்கத் தோன்றும் என்றவாறு.

     அடைவுறு பெற்றியின் அறியத் தோன்றுதலாவது இருசீர்த்தொடை ஆறும்
 முச்சீர்த்தொடை நான்கும் நாற்சீர்த்தொடை ஒன்றும் ஆகிய தொடைவிகற்பம்
 பதினொன்றும்போல, முதல்அடியும் இரண்டாம் அடியும், முதல் அடியும் மூன்றாம்
 அடியும், முதல் அடியும் நான்காம் அடியும், மூன்றாம் அடியும் நான்காம் அடியும்,
 இரண்டாம் அடியும் நான்காம் அடியும் மடிக்கிவரும் ஈரடிமடக்கு ஆறும்,