அணியியலுக்குப்பின் செய்யுளியல் அமைத்துள்ள இவ்வாசிரியர் தொடையிலக்கணம் செய்யுளியலில் கூறுவார்; அதனை முன்னரே அணியியலிலுள்ள மடக்கிற்கும் கொள்ளுமாறு "ஒப்பின் முடித்தல்" என்ற உத்திவகையாற் கூறுவது புதுமையாகத் தோன்றினும், பின்னர் எச்சவியலில் கூறப்படும் அன்மொழித் தொகைக்கண் சொற்பெய்து விரித்தல் போல உருபும் பொருளும் உடன்தொக்க தொகைக்கண் சொற்பெய்து விரிக்க என்று வேற்றுமையியலில் தொல்காப்பியனார் குறிப்பிடுவதனை ஒப்பது இது என்று கொள்க. அல்லதூஉம், சொல்லணிப்பகுதி இவர் மகனாரால் யாக்கப்பட்டது என்பதும் ஒன்று.
ஒத்து நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 95
"அவற்றுள்,
அடிமுதல் மடக்குஓர் ஐம்மூன் றாகும்." - மா. 256
"இடைகடை யவும்அதன் எண்ணிலை பெறுமே." - மா. 257
"உணர்வுறின் மடக்கிவை ஓரிடத் தனவே." - மா. 258
"அடிதொறும் ஈரிடத் தனவாய் முதலொடு
இடைகடை இடைகடை களின்இயன் றளவும்
திதமுற நான்கறு பானெனச் சிவணி
அதனொடு மடக்கொரு நூற்றைந் தாகும்." - மா. 259
"அவற்றுள்,
முதல்தொடை விகற்பம் ஏழொடும் நான்கொடும்
திதப்பட ஓரடி ஒழிந்தன சிவணும்." - மா. 260
"இடைவி டாமடக் கிவையென மொழிப." - மா. 261
"ஏனைய தாமும் இதனதெண் பெறுமே." - மா. 262
"எழுவாய் அடிஒழித்து ஏனைய அடியினும்
கடையொழித் தேனைய காலினும் இரண்டா
மடிதவிர்த் தேனைய அடியினும் மூன்றா
மடியொழித் தேனைய அடியினும் வருமே." - மு. வீ. சொ. 8] |
|
|