என வரும்.
[கானலில் முத்து அலைக்கும் தில்லையில் பெருந்தகையாய் ஓங்காரத்து
உட்பொருளாம் சோதிவடிவாகிய சிவபெருமானுக்கு, நீங்காத ஆசையாகிய பாசத்தினை
மேற்கொண்டு அடியார்கள் கூறும் சொற்கள் மேம்பட்ட பொருள்களும் அணியும்
மாலைகளுமாகும்.
மருள் ஆம் - ஆசை ஆகிய
மருள் - பாசம்
இது மூன்றாடி முதல் மடக்கு ஆமாறு காண்க.]
ஈற்றடி ஆதிமடக்கு வருமாறு :
"இவள்அளவு தீஉமிழ்வது என்கொலோ தோயும்
கவள மதமான் கடாமும் - திவளும்
மலைஆர் புனல்அருவி நீஅணுகா நாளின்
மலையா மலையா நிலம்"
என வரும். ஒழிந்த ஓரடிமடக்கு வந்துழிக் காண்க.
தலைவ! நீ இவளை வந்து அடையாத நாள்களில் யானையின் முகத்திலிருந்து
வழியும் மதநீரை ஒத்து அருவி பாயும் பொதிய மலையிலிருந்து தோன்றும்
தென்றற்காற்று இவள் ஒருத்திக்கு மாத்திரம் நெருப்பைக் காலுவதன் காரணம் யாதோ?
- என்று தோழி கூறியது
மலையா(ம்) மலைய அநிலம் - பொதிய மலையில் தோன்றும் தென்றல் காற்று.