இஃது ஈற்றடி முதல்மடக்கு ஆமாறு காண்க.
இவை நான்கும் ஓரடி முதல்மடக்கு.]
முதல் ஈரடி ஆதிமடக்கு வருமாறு :
"நினையா நினையா நிறைபோய் அகல
வினையா வினையாம் இலமால் - அனையாள்
குரஆளும் கூந்தல் குமுதவாய்க் கொம்பின்
புரவாள நீபிரிந்த போது"
என வரும்.
[குரவம்பூச் சூடிய கூந்தலையும் குமுதம் போன்ற வாயையும் உடைய கொம்பு அனைய தலைவியைப் பாதுகாக்கும் தொழிலைப் பூண்ட தலைவனே! நீ பிரிந்தபோது நின்னையாம் நினைத்து, எங்கள் நிறை என்ற பண்பு எங்களை விட்டு நீங்க வருந்தி, யாம் எச்செயலும் செய்யும் ஆற்றல் இலேமாவேம் - என்று தோழி கூறியது.
"நி(ன்)னை யாம் நினையா, நிறைபோல் அகல
இனையா, வினை யாம் இலமால்-"
நினையா நினையா,
வினையா வினையா,
முதலொடு மூன்றாம்அடி ஆதிமடக்கு வருமாறு :
"அடையார் அடையார் அரண்அழித்தற்கு இன்னல்
இடையாடு நெஞ்சமே ஏழை - யுடையேர்
மயிலா மயிலா மதர்நெடுங்கண் மாற்றம்
குயிலாம்என்று எண்ணல் குழைந்து"
என வரும்.
[பகைவர் அடையும் அரிய அரணை அழித்தற்கு முயல்வார் படும் இன்னல் போன்ற இன்னலுற்றுத் தடுமாறும் மானே! நீ "இவ்வேழை (தலைவி)யினுடைய ஏர் மயிலாம்; மதர் நெடுங்கண் அயிலாம்; மாற்றம் குயிலாம்" என்று உருகி நினைத்தலைத் தவிர்-என்று தலைவி அடைதற்கு அரியள் என்று கண்ட தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லித் தேற்றியவாறு. |
|
|