அணியியல் - சொல்லணி - மடக்கு

347 



     அடையார் - அடைஆர் எயில்,
     ஏர்மயிலாம் - அயிலாம்கண்

     முதலடியும் நான்காம்அடி ஆதிமடக்கு வருமாறு :

     "மானவா மானவா நோக்கின் மதுகரம்சூழ்
     கான்அவாம் கூந்தல்என் காரிகைக்குத் - தேனே
     பொழிஆரம் தார்மேலும் நின்புயத்தின் மேலும்
     கழியா கழியா தரவு"

 என வரும்.

     [மநுகுலத்தில் தோன்றியவனே! மான் விரும்பும் நோக்கினையும் வண்டு
 சூழும் மணம் நாறும் கூந்தலையும், தேன் போன்ற மொழியையும் உடைய என்
 மகளுக்கு உன் ஆத்திமாலை மேலும் உன் புயங்களின்மேலும் உள்ள மிக்க
 ஆசை நீங்காது - என்று தலைவி நிலைபற்றித் திருத்தாயர் கூறியவாறு.

     மானவா - மான் அவாம் நோக்கின்,
     கழியா - கழி ஆதரவு

     முதலடியும் நான்காம் அடியும் முதலில் மடக்கியவாறு காண்க.]

     ஈற்று ஈரடி ஆதிமடக்கு வருமாறு :

     "மாதர் உயிர்தாங்க வள்ளல் வருநெறியில்
     பேதுறவு செய்யும் பெரும்பாந்தள் - யாதும்
     வரையா வரையாம் எனும்மா மதமா
     விரையா விரையா எழும்"

 என வரும்.

     [வள்ளலே! இத்தலைவியின் உயிரைப் புரக்க நீ இரவுக் குறிக்கண் வரும் வழியில்,
 கண்டாரை மயங்கச் செய்யும் பெரிய பாம்புகள், உணவாக எதனையும் வரையறை
 செய்துகொள்ளாமல்,