348

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 மலை என்று சொல்லத்தக்க பெரிய யானைகளை இரையாகக் கோடற்கு விரைந்து
 வரும் - என்றுகூறித் தோழி இரவுக்குறி விலக்கியவாறு.

     வரையா - வரை ஆம் எனும் மதமா,
     இரையா(க) - விரையா எழும்
     இஃது ஈற்று இரண்டடி முதலில் மடக்காமாறு காண்க.]

     இரண்டாம் அடியோடு ஈற்றடி ஆதிமடக்கு வருமாறு :

    "மழைஆர் கொடைத்தடக்கை வாள்அபயன் எங்கோன்
     விழையார் விழையார் மெல்லாடை - குழையார்
     தழையாம் உணவும் கனியாம் இனமு
     முழையா முழையா முறை"

 என வரும்.

     கார்மேகம் போன்ற கொடை வழங்கும் நீண்ட கைகளை உடைய வாட்போரில்
 வல்ல அபயனுடைய பகைவர்கள் அவனுக்கு அஞ்சிக் காட்டிற்கு ஓடிப் புகலிடம்
 தேடிக் கொள்வ ராதலின், அவர்களுடைய விரும்பத்தக்க மெல்லிய ஆடை,
 காட்டில் தளிர்த்தலை யுடைய தழைகளே; உணவும் கனிகளே; அவர்களுக்குச் சுற்றமும்
 மான்களே; அவர்கள் உறைவிடமும் குகைகளே.

     விழையார் - விழை ஆர் மெல்ஆடை,
     உழையாம் - முழைஆம் உறை

     இஃது இரண்டாம் அடியும் நான்காம் அடியும் முதலில் மடக்கியவாறு காண்க.]

     இடை ஈரடி ஆதிமடக்கு வருமாறு :

    "குரஆர் குழலாள் குவிமென முலைநாம்
     விரவா விரவாமென் தென்றல் - உரவா!
     வரவா வரவாம் எனநிலையாய் வையம்
     புரவாளர்க்கு ஈதோ புகழ்"

 என வரும். ஒழிந்த நாலடி மடக்கு வந்துழிக் காண்க.