அணியியல் - சொல்லணி - மடக்கு

349 

     மனவலிமை உடைய தலைவனே! "குரவம்பூச் சூடிய இத் தலைவியின் குவிமென
 முலையிடை நீ விரவாத இரவின்கண் வீசும் தென்றல் காற்றின் வரவு அரவு ஆகும்"
 என்று நினையாது பிரியத் துணிந்துள்ளாய். உலகு புரக்கும் சான்றோர்க்கு இதுவா
 புகழுக் குரிய செயல்?- எனத் தோழி தலைவன் பிரிவு விலக்கியவாறு.

     விரவா - இரவு ஆம்மென் தென்றல்,
     வரவு - அரவு ஆம்

     இதன்கண், இரண்டாம் அடியும் மூன்றாமடியும் முதலில் மடக்கியது
 காண்க.] - இவை ஆறும் ஈரடி முதல் மடக்கு.

     ஈற்றடி ஒழிந்த மூவடி ஆதிமடக்கு வருமாறு :

    "இறைவா இறைவால் வளைகாத்து இருந்துயார்
     உறைவார் உறைவார் புயலான் - நறைவாய்ந்த
     வண்டளவு வண்டளவு நாளின் மயில்ஆலக்
     கண்டுஅளவில் நீர்பொழியும் கண்"

 என வரும்.

     தலைவனே! நீர்த்துளி மிக்க கார்மேகத்தால் தேன் பொருந்திய வளமான
 முல்லைகளில் வண்டுகள் மொய்க்கும் கார்ப்பருவ நாள்களில் மயில்கள்
 ஆடுதலைக் கண்டு கண்கள் கண்ணீரைச் சொரியும். முன்கையிலுள்ள வளைகளைக்
 கழலாமல் அக்காலத்தில் பாதுகாத்துக் கொண்டு இருந்து யாவர் உயிர் வாழ்தல் கூடும்?
 - என்று தோழி கார்ப்பருவத்துத் தலைவிநிலை கூறித் தலைவன்பிரிவு விலக்கியவாறு.

     இறைவா! - இறை வால்வளை,
     உறைவார் - உறை வார்புயலால்,
     வண் தளவு - வண்டு அளவு

     முதல் மூன்றடியும் முதலில் மடக்கியவாறு காண்க.]