350

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இரண்டாம் அடி ஒழிந்த மூவடி ஆதிமடக்கு வருமாறு :

    "கொடியார் கொடியார் மதில்மூன்றும் கொன்ற
     படியார் பணைத்தடக்கை நால்வாய்க் - கடியார்
     உரியார் உரியார் எனைஆள வோதற்
     கரியார் கரியார் களம்"

 என வரும்.

     கொடியாராகிய திரிபுரத்தவரின் கொடிகள் ஆர்ந்த மூன்று மதில்களையும் அழித்த
 இயல்பினர், பருத்த பெரிய கைகளையும் தொங்கும் வாயினையும் உடைய யானையின்
 அஞ்சத்தக்க தோலைப் போர்த்தவர்; என்னை ஆட்கொள்ளுதற்கு உரியவர்;
 தம் பெருமை கூறுதற்கு அரியவர்; கழுத்துக் கறுத்துவர்.

     கொடியார் - கொடி ஆர்மதில்
     (நால்வாய்) உரியார் - (எனைஆள) உரியார்,
     ஓதற்கு அரியார் - களம் கரியார்

     1, 3, 4ஆம் அடிகளில் முதல்மடக்கு அமைந்தவாறு காண்க.]

     மூன்றாம்அடி ஒழிந்த மூவடி ஆதிமடக்கு வருமாறு :

    "மலையு மலையும் மகிழ்ந்துறையும் வேயும்
     கலையும் கலையும் கடவும் - தொலைவுஇல்
     அமரில் எமக்குஅரணாம் என்னுமவர் முன்னிற்
     குமரி குமரிமேல் கொண்டு"

 என வரும்.

     குமரி ஆகிய கொற்றவை, மலையையும் கடலையும் தனக்கு இருப்பிடமாகக்
 கொண்டு பிறைச்சந்திரனை வேய்ந்து, ஆண் மானை வாகனமாகக் கொண்ட
 விளங்குவாள்; அழிவற்ற போரில் தமக்குப் பாதுகாவலாதல் வேண்டும் என்று
 இறைஞ்சுபவருக்குச் சிங்கத்தின்மேல ஏறிக்கொண்டு வந்து முன் நிற்பாள்.