என வரும். ஒழிந்த மூவடிமடக்கு வந்துழிக் காண்க.
எம் உயிர்க் காவலர் ஆகிய தலைவர் எம்மைத் திருமணம் செய்து பாதுகாப்பவர்
அல்லாதகாலை, மாலையிலே, வரிசையாக ஆயர் வாயிலிருந்து வெளிப்படும் இனிய
குழலிசை பாலையாழை விட இருபதுமடங்கு துன்பம் தரவும், அதற்கு மேலும்
பிறர் தம்மைப் புகழத்தக்க புகழ்ச்சியை விரும்பாத தீய மக்கள் விருப்பிக் கூறும்
அலர் எம் உயிரை வாட்டாவோ? - என்று தலைவி தலைவன் சிறைப்புறத்தானாகத்
தன்துயரைத் தோழிக்கு உரைத்தவாறு.
காவலர், காவலர் ஆகுங்கால், மாலைவாய், மாலைவாய் இன்னிசை மேல்
உரை மேவலர் மேவு அலர் - என்று பிரித்துப் பொருள் செய்க.
இது 2, 3, 4ஆம் அடிகள் முதலில் மடக்கியது.
இவை நான்கும் மூவடி முதல்மடக்கு.]