352

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    
    "நனைய நனைய தொடைநம்மை வேய்வர்
     வினையர் வினையர் விரைந்து’    

     என வரும்.

    [‘நீக்கத்தக் களவொழுக்கத்தை விடுத்துத் திருமண ஏற்பாடு செய்யச் சுரம் கடந்து
சென்ற தலைவருடைய மேம்பட்ட சொற்கள் தற்போது குற்றப்பட்டுவிட்டன’ என்று
சொல்லாதே. மொட்டுகளால் ஆகிய குளிர்ந்த மாலையை நமக்குச் சூட்ட எடுத்த
செயலைச் செய்தலில் வல்ல நம் தலைவர் தம் வினையை முடித்து விரைந்து வருவர் -
என்று தலைவன் பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி ஆற்றுவித்தவாறு.

     வரைய - களவொழுக்கத்தை நீக்க.

     வரைய - திருமணம் செய்ய,

     புரைய மாற்றம் - மேம்பட்ட சொற்கள். .

     புரைய - குற்றப்பட்டுவிட்டன.

     நனைய நனைய - மொட்டுக்களையுடைய குளிர்ந்த.

     வினையர் - வினையில" வல்ல தலைவர்.

     வினையர் - எடுத்த வினையை முடிப்பர்.

     இது நான்கடியும் முதலில் மlக்கியவாறு.

     இவை பதினைந்தும் அடிமுதல் மடக்கு.]

     முற்று இடைமடக"கு வருமாறு:

    "மனமேங் குழைய குழையவாய் மாந்தர்
     இனம்நீங் கரிய கரிய - புனைவதனத்து
     உள்வாவி வாவிக" கயல்ஒக்கும் என்உள்ளம்
     கள்வாள வாளவாம் கண்" 

என வரும்.