அணியியல் - சொல்லணி - மடக்கு

353 

     [என் உள்ளத்தைத் திருடிக் கொண்டவளுடைய வாளை யொத்த கண்கள்
 என்மனம் எங்குதற்குக் காரணமான மானின் மருண்ட பார்வையை உடையவாய்
 காதணியச் சென்று அணுகுவனாய், இளைஞர்கூட்டம் விட்டுநீங்குதற்கு அரியவாய்
 கரி நிறத்தை உடையனவாய் அழகய் முகத்து உலாவிக் குளத்தில் உள்ள கயல்
 மீன்களை ஒத்திருக்கின்றன - என்று  தலைவன் தலைவியின் கண் நயந்து
 உடைத்தவாறு

     என் உள்ளம் கள்வாளுடைய வாள் அவாம் கண், மனம் ஏங்குஉழைய, குழை
 அவாய்- மாந்தர் இனம் நீங்க அரி, கரிய,வதனத்துள் வாவி, வாவிக்கயல் ஒக்கும்"
 - என்று  பொருள் செய்க.

     இது முற்றும் இடைமடக்கு]

     முற்று இறுதி மடக்கு வ=மாறு:

    "மாலை அருது வஞ்சயான் வஞ்சியான்
     மேலை அமரர் கடைலை - வே,ல
     வளையார் திரைமல் வருமன்ன மன்ன
     இளையாளா இவளை வளை"

 என வரும்.

     [முன்னொரு காலத்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது அக்கடலின்
 வளைகளைக் கொழித்து வரும் அலைகளின் மேல் தோன்றிய அன்னம போன்ற
 திருமகளை ஒத்த இளையவளாகிய இவளை, வஞ்சிநகரை ஆளும் வேந்தன தன்
 மாலையத் தாராது வளைகளைக் கவர்ந்து வஞ்சிக்கமாட்டான் - என்று திருத்தாயர்
 ஆற்றியவாறு,

     அமரர் கடைவேலை அவ்வேலைத் திரைமேல் வரும் அன்னம் அன்ன இவளை
 அரளாது  வஞ்சியான், இவள் வளைகளை வஞ்சியான் - என்று பிரித்துப்
 பொருள்செய்க. இது முற்றும  இறுதிமடக்கு]

    45 - 46