அணியியல் - சொல்லணி - மடக்கு

355 

     [காந்தளே! வரிசையாக வருகின்ற பசுக்கூட்டங்களின் மணி ஓசையைப் போல
 எங்கள் நிறையைக் கவராதே. அளவிட முடியாத அரையாம் இருளுக்கு முன் வரும்
 மயக்கந் தரும் மாலைக் காலத்தில், விரைந்து ஒலித்துக்கொண்டு மின்னலாகிய
 ஒளியைத் தரும் மேகங்களும் எழும். ஒன்றும் உரையாத புகழாளராகிய தலைவரினும்
 முல்லை நிலத்து முல்லைக் கொடிகளும் பகையாயின - என்று கார்ப்பருவ
 மாலைக்காலத்துத் தலைவி தலைவன்பிரிவால் வருந்திக் கூறியவாறு.

     கோடல்! நிரையா ஆநிரை மணிபோல் நிறைகோடல்;

    "வரையா அரைஆம் இருள்முன் மாலை மாலை; விரையா,
     இரையா மின்ஒளி மேகம் எழும்; முல்லைமுல்லை ஏகம் உரையா
     உரையாரினும் ஒல்லன - எனப் பிரித்துப் பொருள் கொள்க.
     உரையாரினும் ஒல்லன - எனப் பிரித்துப் பொருள் கொள்க.

     இது முதல் இறுதி முற்றுமடக்காதல் காண்க.]

     முற்று இடை இறுதிமடக்கு வருமாறு:

    "வருகம் புளினம் புளினம்பயில் வேலைவேலை
     ஒருகால் உலகா உலவாவரு மோத மோத
     வருகே தகைகே தகைசேர்தரு மன்ன மன்ன!
     பெருகா தனவே தனவேரசை மாதர் மாதர்"

 என வரும்.

     [தலைவனே! வாராநின்ற கம்புள் என்ற பறவைகளின் கூட்டம் மணமல்மேடுகளில்
 இருக்கும்காலத்தில் கடல் வெள்ளம் ஒருகாலும் குறையாது உலவிக்கொண்டு கரையை
 மோதவரும் அருகில் நின்று தடுக்கும் தாழையில் அன்னங்கள் தங்கியிருக்கும்.
 இப்பெண்ணின் காதல், முலைகளின் அழகு அழியப் பெருகாது ஒழியுமோ? -
 எனத்தோழி தலைவிநிலை கூறித் தலைவனை வரைவு கடாயவாறு.