356

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     வரு கம்புள் இனம் புளினம் பயில்வேலை, வேலை ஓதம் ஒரு காலும் உலவாது
 மோத உலவாவரும். அருகே தகை கேதகை அன்னம் சேர்தரும். மன்ன! மாதர்
 மாதர் தனம் ஏர்அசை(ய) பெருகாதனவே - எனப் பிரித்துப் பொருள் கொள்க.

     இஃது இடையும் இறுதியும் முற்றுமடக்காதல் காண்க.]

     முற்றும் முற்றுமடக்கு வருமாறு:

    "களைகளைய முளரியரு கடைகடைய மகளிர்கதிர் மணியுமணியும்
     வளைவளைய கரதலமு மடைமடைய மதுமலரு மலைய மலைய
     இளையிளையர் கிளைவிரவி யரியரியின் மிசைகுவளை மலருமலருங்
     கிளகிளைகொ ளிசையளிகள் மகிழ்மகிழ்செய் கெழுதகைய மருதமருதம்"

 என வரும். இவையெல்லாம் இடையிடாது வந்தன.

     [தாமரையாகிய களையைக் களைய அவற்றின் அருகே அடையும் மருதநில
 உழத்தியர் அணிந்த ஒளி வீசும் மணிகளும், அணிந்திருந்த வளைகளால்
 வளைக்கப்பட்ட கைகளும், அடைக்கப்பட்ட மடையில் உள்ள தேனை உடைய
 பூக்களும், ஒன்றோடொன்று நலன் அழிப்பதற்கு மாறுபட, மிக இளையர் குழாம் கூடி
 அறுக்கின்ற நெற்கதிர்களின்மீது குவளைப்  பூக்களும் மலரும், கிளை என்ற நரம்பின்
 ஒலி ஏனைய ஒலி இனங்களோதடு தொடர்பு கொள்ளும் ஓசை போலப் பாடும்
 வண்டுகள் தேனை உண்டு மகிழுமாறு, விளக்கமுடைய மருதமரங்களையுடைய
 மருதநிலம் மகிழ்ச்சியைத் தரும்.

     முளரிக்களை களை அருகு அடை கடையமகளிர் கதிர்மணியும் அணியும்
 வளைவளைய கரதலமும், அடை அம்மடைய மது மலரும் அலைய மலைய, இளைய
 இளையர் கிளை விரவி அரி அரியின்மிசை குவளை மலரும் அலரும், கிளை
 கிளைகொள் இசை அணிகள் மகிழ் கெழுதகைய மருதமரங்களையுடைய மருதம்
 மகிழ்செய்யும் என்று பிரித்துப் பொருள்கொள்க.