அணியியல் - சொல்லணி - மடக்கு

357 

     இஃது அடிதோறும் மூன்று இடங்களிலும் மடக்கிவந்தமையால், முற்றுமடக்கினை
 ஒரு புடையான் ஒத்து வந்த மடக்காகும்.]

     முற்று ஆதிமடக்கு வருமாறு:

    "தோடு கொண்டரி முரன்றெழக் குடைபவர் குழல்சேர்ந்த
     தோடு கொண்டதே மலர்சுமந்து அகில்கமழ்ந்து அவர்தம்
     தோடு தைந்தசெஞ் சாந்தணி திரள்முலை இடைதோய்ந்
     தோடு தண்புனல் நித்திலம் துறைதொறும் சொரியும்"

 என வரும்.

     [கூட்டமாக வண்டுகள் ஒலித்தெழ, நீராடுவார் கூந்தலில் பொருந்திய இதழ்
 கொண்ட இனிய மலரைச் சுமந்து, அகில் மணந்து, அம் மகளிருடைய தோள்களில்
 பூசிய செஞ்சந்தனம் தம்மிடத்தும் பூசப்பட்ட திரண்ட முலையிடையே தோய்ந்து
 ஓடும் குளிர்புனல் முத்துக்களை நீர்த்துறைதோறும் குவிக்கும்

     தோடு - கூட்டம். பூவின் இதழ்.

     தோள் துதைந்த; தோய்ந்து ஓடு தண்புனல் - எனப் பிரித்துப் பொருள் செய்க.

     தோடு என்ற சொல் பாடலின் நான்கு அடிகளிலும் வந்தமையால் இது முற்று
  ஆதிமடக்காகும் (இடையிட்டு வந்தது)]

     முற்று இடைமடக்கு வருமாறு:

    "பரவி நாடொறும் படியவாம் பல்புகழ் பரப்பும்
     இரவி சீறிய படியவாம் பரிஎரி கவர
     விரவி மான்பயில் படியவாம் வேய்தலை பிணக்கும்
     அருவி வாரணம் படியவாம் புலர்பணை மருதம்"

 என வரும்.

     [உலகத்தவர் நாள்தோறும் புகழ்ந்து விரும்பும் பல புகழ்களையும் உடைய
 சூரியகுல மன்னனாகிய சோழன் கோபித்த