என வரும். இவை இடையிட்டு வந்தன. ஒழிந்தன வந்துழிக் காண்க.
[வண்டுகள் ஒலிக்கும் கொன்றை பொன் போலப் பூக்க, மின்னல் ஒளிவிட
இந்திரவில்லை வளைத்து வீழ்ந்த மழைத்துளிகளை உடைய இத்தகைய கார்மேகக்
கூட்டம் இருண்டு புறப்படும் இக்கார்காலத்தில், மயில்கள் நாற்புறமும் ஆடுதற்குப்
புறப்பட்டு வருகின்றன. தலைவர் மீண்டு வருவதற்குக் குறிப்பிட்ட நாள் இது;
ஆனால் அவர் வந்திலர் - என்று கார்ப்பருவங் கண்டு வருந்திய தலைவி
சொற்றவாறு.
இதழி பொன் கால, ஊன்றிய கால, முகில் எழுதரும் காலம், மயில் மருங்கு ஆல
மன்னர் சொன்ன நாள்இது வாரலர் - என்று கூட்டிப் பொருள்செய்க.
இஃது பொன் கால, ஊன்றிய கால, முகில் எழுதரும் காலம், மயில் மருங்கு ஆல
மன்னர் சொன்ன நாள்இது வாரலர் - என்று கூட்டிப் பொருள்செய்க.
இஃது இடையிட்ட முற்று இறுதிமடக்கு. இடையிடுதல்: மடக்கும் சீர் மீண்டும்
மடக்குதற்கு இடையே பல வேற்றுச் சீர்கள் வருதல்]