இஃது இடையிட்டும் இடையிடாதும் வந்தது. ஒழிந்தன வந்துழிக் காண்க.
[வாவும் மான்களினுடைய பெருமையை உடையன; மேகம் போன்ற
மதயானைகளை உடையன; அச்சமான விலங்குகளின் நகங்கள் கிழிக்கும் மார்பினை
மான்கள் உடையவாயின; தீமையே வடிவமாயின; மக்கள் உள் நுழையாத் தன்மை
பெற்றன; சோலைகளை ஒப்ப மிக்க அழகுடைய காடுகள் (வேனிலால்) நெருப்பு
வடிவினமாயின.
வாம் மான மான; மழைபோல் மதமானம் ஆன; நாம் ஆன மான நகம் ஆழ்
அகம் மானம் ஆன; தீமை ஆன; மானவர் புகுதாத் திறமான ஆன; கா மான மான
கவின்கான் கனல் மானம் ஆன - என்று பொருள் செய்க.
"கவின் கான்" - எழுவாயாகக் கொள்க.]
இஃது இடையிட்டும் இடையிடாதும் வந்த முற்று இடை இறுதி மடக்காமாறு
காண்க.