362

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     ஒத்த நூற்பாக்கள்

     முழுதும் - தண்டி 96, மு.வீ. சொ. 9 

    "பாதம் அனைத்து மடக்குதல் பழிதீர்த்து
     ஓதிய அனைத்தினும் உறும்அழகு உடைத்தே."                -மா. 263 

    "ஒருசொலின் மடக்கலும் உளஎன மொழிப."                    -மா. 264 

    "பதத்தொடு பதம்மடக் குதல்பத மடக்கே."                     -மா. 265 

    "அந்தா திப்பது அந்தாதி மடக்கே."                           -மா. 266 

    "அம்மனை கைக்கொண்டு ஆடுநர் தம்மையும்
     அம்மனை யாய்மதித்து ஆஙகொர்கர்த் தாவினை
     நிந்தாத் துதிதுதி பெறநிகழ்த் துதலும்
     அந்தா தித்திடை அடிமடக் காகவும்
     ஈற்றடி இரட்டுற இசைத்ததைத் தாபித்து
     ஆற்றலின் அமைக்குஅம் மனைமடக்கு ஒன்றுள."              -மா. 267 

    "தொடர்ச்சொல் பலபொருள் சிலேடைமுந் துறவே
     இடர்ப்பா டின்றியீற் றுறுமிணை மடக்குள."                   -மா. 268 

    "முதலடி இரண்டினும் மூன்றினும் முதலினும்
     இடையடி இரண்டினும் முதலினும் இறுதியும்
     இறுதி இரண்டினும் முதலொழித் தேனைய
     அடியினும் கடைஅயல் அல்லன மூன்றினும்
     மூன்றாம் அடிஒழித்து ஏனைய மூன்றினும்
     இரண்டாம் அடிஒழித்து ஏனைய மூன்றினும்
     எல்லா அடியினும் எய்து என்ப."                     - மு. வீ. சொ. 11] 

 
 அவற்றுள், ஈரடி மடக்கு வருமாறு:

    "விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
     விரைமேவு மதமாய விடர்கூடு கருநாக
     வரைமேவு நெறியூடு தனிவாரல் மலைவாண
     நிரைமேவும் வளைசோர இவள்ஆவி நிலைசோரும்."

 இது முதல்ரஈரடி மடக்கியது.