அணியியல் - சொல்லணி - மடக்கு

363 

     [மலைநாட! நறுமணம் கமழும் மதநீரை உடைய துன்பம் உறும் கொடிய
 யானைகளை இரையாக விரும்பும் வலிய குகைகளில் தங்கும் கடிய பாந்தள்கள்
 சஞ்சரிக்கின்ற மலை வழியே தனியே வாராதே; வரிசையாக அணிந்த வளையல்கள்
 சோர இவள் உயிர் வாடுவாள் - என்று தோழி தலைவனை ஏதம் கூறி இரவுக்குறி
 விலக்கியவாறு.

     விரை மேவு மதம் ஆய இடம்கூடு கடுநாகங்களை இரை மேவும் மதம்
 ஆய விடர் கூடும் கடு நாகம் மேவும் நெறி - என்று பொருள் செய்க.]

    "கடன்மேவு கழிகாதல் மிகநாளும் மகிழ்வார்கள்
     உடன்மேவி நிறைசோர மெலிவாள்தன் உயிர்சோர்வு
     கடன்மேவு கழிகாதல் மிகநாளும் மகிழ்வார்கள்
     உடன்மேவு பெடைகூடும் அறுகாலும் உரையாகொல்."

     இது முதல் அடியும் மூன்றாம் அடியும் மடக்கியது.

     [முறையாகப் பொருந்தும் மிக்க காதல் சிறக்க நாள்தோறும் மகிழ்வார்கள் பலர்
 உளர். ஆனால் தலைவி தன்னோடு பொருந்திய நிறை என்ற பண்பு சோர
 மெலிகின்றாள். இவளுடைய உயிர் தளர்வதனை, கடலை அண்மிய உப்பங்கழிகளில்
 மகிழச்சி மிக நாள்தோறும் களிப்பு மிக்க பூக்களிலுள்ள தேன்களைப் பெடையோடு
 கூடி அருந்தும் வண்டுகளும் தலைவர்க்கு உரையா போலும் - என்று தோழி தலைவன்
 சிறைப்புறமாகக் கூறியது.

     கடன்மேவு கழிகாதல் மிக நாளும் மகிழ்வார்கள்:

     இவள் உயிர் சோர்வு கடல் மேவும் கழி காதல் மிக நாளும்

     மகிழ்வார்கள் உடன்மேவும் பெடையோடு கூடும் அறுகாலும் உரையா - என்று
 பொருள் செய்க.

     முதடியும் மூன்றாமடியும் மடக்கி வந்தவாறு]