இஃது ஈற்றடிஒழித்து ஏனை மூன்று அடியும் மடக்கியது.
[சோலைகளில் உள்ள மரங்களில் பழகும் வண்டுகள், காமரம் என்ற பண்ணினைப்
பாடும் நீர்மையன; தேனைக்கொண்ட மன்மதன் அம்புகள், வேல் போன்று கூரியவாய்
உள்ளன. வேனிற்காலம் வரவும், நாம் துன்புறுதலை நம் தலைவர் நினைக்க
வில்லையே - என்று வேனிற்பருவ வரவின்கண் பிரிதல் ஆற்றாது தலைவி
புலம்பியவாறு.
கா மரம் பயில் மதுகரம், காமரம் பயில நீர;
மது கரம் காமர் அம்பு அயில் நீர; மது கரம்
நாம் அரந்தை உற நமர் நினையார் - எனப் பொருள் செய்க.
கரம் - கொண்டிருத்தல், எதிர்ப்படல்.
மது - தேன், ஆகுபெயரால் இளவேனிற்காலம்.
இதன்கண், முதலடி இரண்டாம் மூன்றாம் அடிகளாக மடக்கியவாறு.