அணியியல் - சொல்லணி - மடக்கு

367 

     இரண்டாம் அடிஒழித்து ஏனை மூன்றடி மடக்கு:

    "கடிய வாயின காமரு வண்டினம்
     அடிய வாயகன் றாருழை வாரலர்
     கடிய வாயின காமரு வண்டினம்
     கடிய வாயின காமரு வண்டினம்."

     இஃது இரண்டாம் அடி ஒழித்து ஏனை மூன்று அடியும் மடக்கியது.

     [விளக்க முற்றனவாகிய விருப்பம் மருவும் வளைகள் பாதங்களை நோக்கிக்
 கழன்று விழவும், நம்மை அகன்ற தலைவர் நம் நலிவு கண்டு நம்பக்கல் மீண்டாரல்லர்.
 சோலைகளில் மருவும் வண்டினங்கள் அச்சந் தருவனவாய் உள்ளன. விரும்பத்தக்க
 சிறந்ததது (பழைய) நாள்கள் நமக்கு நீக்கப்பட்டன ஆகிவிட்டன - என்று தலைவன்
 பிரிவிடைத் தலைவி புலம்பியவாறு.

     வண்டுஇனம் அடியவாய், அகன்றார் உழை வாரலர்;

     காமரு வண் தினம் கடிய ஆயின - எனப் பொருள்செய்க.

     இதன்கண், முதலடி மூன்றாமடியாகவும் நான் காமடியாகவும் மடக்கியவாறு]

  மூன்றாம் அடி ஒழித்து ஏனை மூன்றடி மடக்கு:

    "கோவ ளர்ப்பன கோநக ரங்களே
     கோவ ளர்ப்பன கோநக ரங்களே
     மேவ ளக்கர் வியன்திரை வேலைசூழ்
     கோவ ளர்ப்பன கோநக ரங்களே."

     இது மூன்றாம் அடி ஒழித்த ஏனைய மூன்றடியும் மடக்கியது.

     [பெரிய நகரங்கள் ஒளியை மிகுப்பன; அரசன் பெருக்குவளை இறைவனுடைய
 கோயில்களே; கடல் தனது அலைகளோடும் கரையோடும் சூழ்ந்திருக்கும் சில
 உலகத்தைக் காப்பன அரசனுடைய கைகளே.