கோ - பெரிய, ஒளி, அரசன், மேம்பாடு, பூமி என்ற பொருள்களிலும், கோநகரங்கள் - மேம்பட்ட ஊர்கள், இறைவனடைய கோயில்கள், அரசனுடைய கைகள் என்ற பொருள்களிலும் வருதல் காண்க. கோன கரங்கள் - அரசன் கைகள்.
முதலடி, இரண்டாமடியாகவும் நான்காமடியாகவும் மடக்கியவாறு]
முதலடி ஒழித்த ஏனைய மூன்றடி மடக்கு:
"வரிய வாங்குழல் மாத ரிளங்கொடி
அரிய வாங்கயத் தானவ னங்களே
அரிய வாங்கயத் தானவ னங்களே
அரிய வாங்கயத் தானவ னங்களே."
இது முதல்அடி ஒழித்து ஏடின மூன்றுஅடியும் மடக்கியது.
[வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய இளங்கொடி பெண்ணே! அடைதற்கு அரிய அவ்விடத்துப் பள்ளத்தில் நீர் ஊறியுள்ளது. வண்டுகள் அவாவத்தக்கனவாய்க் களிறுகளின் மதநீர்வெள்ளங்கள் உள்ளன. காடுகள் சிங்கங்கள் விரும்பும் பெரிய இடங்களை உடையன.
அரிய ஆங்கு அயத்து ஆன வனங்களே;
அரி அவாம் கயத்துத் தானம் வனங்களே;
அரி அவாம் கயத்தான வனங்களே எனப் பிரித்துப் பொருள் செய்க
அரி - வண்டு, சிங்கம்
கய - யானை, பெருமை.
வனம் - நீர், காடு.
இரண்டாமடி மூன்றாமடியாகவும் நான்காமடியாகவும் மடக்கியவாறு, இவை நான்கும் மூன்றடி மடக்கு.
|
|
|