அணியியல் - சொல்லணி - மடக்கு

369 

     நான்குஅடி மடக்கு வருமாறு:

    "வான கந்தரு மிசைய வாயின
     வான கந்தரு மிசைய வாயின
     வான கந்தரு மிசைய வாயின
     வான கந்தரு மிசைய வாயின"

 என வரும். இந்நான்கடி மடக்கினை ஏகபாதம் என்றும் கூறுவர்.

     [மேகம், கடலிடத்தில் கொடுக்கும் ஓசையை உடையனவாய், ஆகாயத்தைக்
 கைப்பற்றிக் -கொள்ளும் எழுச்சியை விரும்பின; விண்ணுலகத்தை ஒக்கும் புகழை
 உடையனவாய பெரிய மலைகள் மேலிடத்தில் மரங்களைக் கொண்டுள்ளன.

     வான் அகம் தரும் இசைய ஆயின,
     வானகம் தரும் இசை அவாவின.
     வானகம் தரும் இசைய ஆயின
     வான்நகம், தரு மிசைய ஆயின.


 என்று பிரித்துப் பொருள் கொள்க.

     வானகம் - ஆகாயம், விண்ணுலகம், பெரியமலை. இசை - ஓசை, எழுச்சி, புகழ்.

     இது முதலடியே ஏனை மூன்றடியாகவும் மடக்கியவாறு]

     "அதன்சிறப்பு" என்னாது, "ஆங்கு அதன் சிறப்பு" என்ற மிகையானே, ஒரு
 சொல்லானே நான்குஅடி முழுவதும் மடக்கும் சொல்மடக்கும், இரண்டு அடியாக
 மடக்கும் பாதமடக்கும், இடையிடாது வந்த அந்தாதி மடக்கும், இடையிட்டுவந்த
 அந்தாதி மடக்கும் வரவும் பெறும்.

     47-48