அணியியல் - பொது

37 

     இக்குளகம் இரண்டு பாடல்களாக அமையும் உகளகம், மூன்று பாடல்களாக
 அமையும் சாந்தானிகம், நான்கு பாடல்களாக அமையும் காபாலிகம், ஐந்தும் ஐந்துக்கு
 மேற்பட்டனவும் ஆகிய பாடல்களாக அமையும் அந்தியம் என நான்கு வகையினது
 என்று மாறன் அலங்காரம் கூறுகிறது.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 4.

    "குளகம் பலபாட்டு ஒருவினை"

- வீ 178 

    "குளகம் பலபாட் டொருவினை பேர்கொண்டு
     வளர்முலையாய் மூன்றிடத்தும் மன்னும் - அளவை
     உகளகஞ்சாந் தானிகங்கா பாலிகத்தோ டைந்தின்
     மிகல்வகைத்தா நூல்சொல் விதி"

- மா. 68 

    "குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்"

- மு. வீ. செய்யுளணி 4 

தொகைநிலைச் செய்யுள்

 625. தொகைநிலைச் செய்யுள் தோன்றத் கூறின்
      ஒருவன் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
      பொருள்இடம் காலம் தொழில்என நான்கினும்
      பாட்டினும் அளவினும் கூட்டியது ஆகும்.

     இது தொகைநிலைச் செய்யுளது இயல்பு கூறு கின்றது.

     இ-ள் :  தொகைநிலைச் செய்யுள் என்பதனை விளங்கக்கூறின், ஒருவனால்
 உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவற்றையும், பலரால் உரைக்கப்பட்டுப்