370

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     அவற்றுள் சொல்மடக்கு வருமாறு:

    "உமாதர னுமாதர
     னுதாதர னுமாதர
     னுமாதர னுமாதர
     னுமாதர னுமாதரன்"

 என வரும்.

     [உமாதரனும் (உமையைத் தரித்தவன்) மாதரனும் (மானைத் தரித்தவனும்),
 மா (அழகு) தரனும், மா (மாமரம்) தரனும், மா (யானைத்தோல்) தரனும், மாதரனும்
 (இடபத்தை ஊர்பவனும்), ஆதரனும் (அடியாரிடம் அன்புடையவனும், மாது அரன்
 (பெருமை பொருந்திய சிவபெருமானாவான்). இதுவும் ஏகபாதம்.]

     உமாதரன் - உமையைத் தரித்தவன்;

     மாதரன் - மானை ஏந்தியவன்;

     மாதரன் - அழகை உடையவன்;

     மாதரன் - மாமரத்தடியில் தங்கியிருப்பவன்;

     மாதரன் - யானைத்தோலைப் போர்த்தியவன்;

     ஆதரன் - விருப்பமுடையவன்;

     மாதுஅரன் - பெருமை மிக்க சிவபெருமான்.

     பாத மடக்கு வருமாறு:

    "பணி பவ னந்தன தாக மன்னுவார்
     பணி பவ னந்தன தாக மன்னுவார்
     அணியென மேயது மன்ப ராகமே
     அணியென மேயது மன்ப ராகமே"

 எனவும்

     [பாம்புகளுக்கு இருப்பிடமாகத் தமது மார்பைக் கொடுப்பவர்;

     கீழான பிறப்பு இறப்புகள் இன்றி நிலைபெற்றிருப்பவர்; அழகு என்று
 பொருந்தியதும் அன்பர் இதயமே;