அணி என்று தரித்துக்கொள்ளுவது நிலைபெற்றுள்ள திருநீறே.
பணிபவனம் தனது ஆகம் மன்னுவார், பணிபவம்நந்து நதாக மன்னுவார்., அன்பர் ஆகம், மன்பராகம் - என்று பிரித்துப் பொருள் செய்க. பணி - கீழான; பவம் - பிறப்பு; நந்து - இறப்பு; நதாக - இல்லையாம்படி.
முதல் ஈரடியும் கடை ஈரடியும் மடக்கியவாறு.]
"கலைநி லாவரு மாலை மணங்கொள்வான்
மலைய மாருத மாறல மாதர்கண்
கலைநி லாவரு மாலை மணங்கொள்வான்
மலைய மாருத மாறல மாதர்கண்"
எனவும்,
மேகலை இடையில் நிலைநிற்கப்பெறாத அரிய மாலைக்காலத்தில் தலைவருடைய கூட்டத்தை வேண்டிக் காதலோடு கூடியகண் மிக்க அழுகையை நீங்கா; கலைகளை உடைய நிலா எழும்; மாலையில் உள்ள மணத்தை நுகரவேண்டி, இப்பெண்ணிடத்தில் தென்றல் நீங்காது.
கலை நில்லா அரு மாலை மணம் கொள்வான் மாதர் கண் மலைய மாருதம் மாறல. கலை நிலா வரும். மாலை மணம் கொள்வான் மாதர்கண் மலையமாருதம் மாறல் - என்று பிரித்துப் பொருள் செய்க.
இது முதலடியும், இரண்டாமடியும் நான்கா மடியும் மடக்கியவாறு,]
"ஓத நின்றுல வாவரும் வேலைவாய்
மாத ரங்க மலைக்கு நிகரவே
ஓத நின்றுல வாவரும் வேலைவாய்
மாத ரங்க மலைக்கு நிகரவே"
எனவும் வரும். பிறவும் வந்துழிக் காண்க. |
|
|