[வெளியே நின்று சொல்லுவதற்கு முடிவில்லாத அரிய நேரத்தில், வெள்ளம்
நிலைபெற்று உலவிவருகின்ற கடலின் பெரிய அலைகள் மலைக்கு ஒப்பாக வந்து
இப்பெண்ணின் உறுப்புக்களைத் துன்புறுதலில் ஒன்றற்கு ஒன்று இணையாம்படி
துன்புறுத்தும்.
ஓத நின்று உலவா அரும் வேலைவாய், ஓதம் நின்று உலவா வரும் வேலைவாய்
மா தரங்கம் மலைக்கு நிகரவே, மாதர் அங்கம் நிகரவே மலைக்கும் - என்று பிரித்துப்
பொருள் கொள்க.
இதுவும் முதலடியும் மூன்றாமடியும், இரண்டாமடியும் நான்காமடியும் மடக்கியவாறு]