374

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும்- தாண்டி 97 

    "மதித்தோ ரெழுத்தினை மடக்கலும் மடக்கே."                 - மா. 269 

    "ஓரெழுத் தொடுமுயி ரினுமுட லினுமூ
     வினத்தினும் வருமென இசைக்கப் படுமே."             - மூ. வி. சொ. 12 

     வரலாறு:

    "நாதா நாதம் கூடிசை நாடும் தொழிலோவாய்
     தாதா தார மாக விரைத்தண் மலர்மீதே
     வாவா வார்தண் சோலையில் வாழும வரிவண்டே
     யாயா யாளிற் சேர்த்துவ தன்பற் கிசையாயால்"

 என வரும்.

     [பலவிதமதான ஓசைகள் கூடிய இசையினை ஆராயும் தொழி நீங்காமல்
 தாதுகளையே ஆதாரமாக நறிய தண்ணிய மலர்கள்மீது தாவி நீண்ட தண்ணிய
 சோலையில் வாழும் கோடுகளை உடைய வண்டே! அன்னை என்னை இற்செறிக்கப்
 போவதனைத் தலைவனுக்குக் கூறுவாயாக - என்ற தலைவி கூற்றில்,

     நாநா (நானாவிதமான) நாதம் கூடும் இசை நாடும் தொழில் ஓவாய், தாது
 ஆதாரமாக மலர்மீது வாவா (வாவி) வாழும் வரிவண்டே! யாய் ஆயாள் (தாயானவள்)
 இல் சேர்த்துவது அன்பற்கு இசையாய் - என்று பொருள்கொள்க.

     இப்பாடலில், முதலடியில் நா, இரண்டாம் அடியில் தா, மூன்றாம் அடியில் வா,
 நான்காமடியில் யா என்ற எழுத்துக்கள் மடக்கியவாறு காண்க.]

     "ஓரெழுத்து மடக்கலும், என்ற உம்மையால் ஓரெழுத்தும் ஈரெழுத்தும்
 மூவெழுத்தும் நான்கெழுத்தும் உயிராயும் மெய்வருக்கமாயும் இனவருக்கமாயும் வரும்.
 அவ்வாறு வருங்கால் உயிராயும் உயிர்மெய்யாயும் வரும்.