அணியியல் - சொல்லணி - மடக்கு

375 

     இவையெல்லாம் ஓரோர் செய்யுள் முழுவதூஉம் வரும் எனக்கொள்க.

     அவற்றுள் ஓர்உயிரான் வருவனற்றிற்குச் செய்யுள்:

    "அமல லகல மகதல லபய
     கமல பவன மவள - தமல
     மடர வளக சலச வதன
     மடர மதன நட"

     எனவும்,

     [அபயனே! எங்கள் மார்பினைத் தழுவாதே, இரவில் நீங்குக. காமனே! தாமரை
 மலரையே இடமாக உடைய திருமகளை ஒத்த இத்தலைவியுடைய களங்கமற்ற செறிந்த
 கூந்தலை உடைய முகத்து அழகைக் கெடுக்காதே - என்று பரத்தையிற் பிரிந்து வந்த
 தலைவனுக்கு தோழி வாயில் மறுத்தது.

     அபய! மதன! அல் அகலம் அமலல்; அகல்; கமல பவனம் அவள அமல அடர
 அளக வதனம் அடரல் - என்று பொருள்கொள்க.

     இஃது எல்லாவிடத்தும் அகரமாகிய குற்றுயிரே வந்த குற்றுயிர் மடக்காமாறு
 காண்க.]

    "தாயாயா ளாராயா டாமாறா தாராயா
     யாமாரா வானாடா மாமதாமா - தாவாவா
     யாவாகா காலாறா காவாகா காணாநா
     மாலாறா மாநாதா வா"

     எனவும் வரும். ஏனையவந்துழிக் காண்க. இவை ஓர் உயிர் ஓர் அலகாகவே
 வந்தன.

     [தாய் ஆயாள் ஆராயாள் ஆதலின் தா (வருத்தம்) மாறாது. அதனை நீ
 ஆராயாய். அங்ஙனம் ஆராயாத நினக்கு யாம் ஆரா? (யாவராகுவேம்) வான் நாடா!
 (தேவருலகத்தை