ஒத்த நாட்டை உடையவனே) மாதுஆம் (இப்பெண்ணானவள்) மா தா ஆம் (பெரிய வருத்தம் அடைவாள்) வா (வருவாயாக) வந்தால், யா வா? (உனக்கு எப்பொருள் வாய்க்காது) கால் ஆறா வா கா (கால் ஆறி அவசரமின்றி வந்து எங்களைக் காப்பாயாக) ஆகாகாண் (இத்துன்பம் உறுதல் தாங்க ஒண்ணாது என்பதனை நோக்குவாயாக) நா நாம் ஆம் (அயலவர் நா எங்களுக்கு அச்சம் தருகிறது) மால் ஆறா (மயக்கமும் நீங்கா) மா நாதா! (பெரிய தலைவனே) வா (வருவாயாக)
இப்பாடலில், ஆதாரமதாகிய நெட்டுயிரே தொடர்ந்து வந்தமையால், இது நெட்டுயிர் மடக்காமாறு.
மெய்வருக்கத்தான் வருவனவற்றிற்குச் செய்யுள்:
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா"
எனவும்,
காக்கைக்கு ஆகா கூகை; கூகைக்கு ஆகா காக்கை; கோக்குக் கூ காக்கைக்கும், கைக்கைக்கும் கொக்கு ஒக்க, காக்கைக்கும் கைக்கைக்கும் ஆகா. உம்மைகள் தொக்குகின்றன. பகற்பொழுதில் காக்கைக்குக் கூகை தோற்கும், இரவில் கூகைக்குக் காக்கை தோற்கும். (ஆதலின் பொழுதறிந்து வெறறிக்குரிய செயலில் பொருந்துதல் வேண்டும்.) அரசனுக்கு நாடு காத்தற்கும் பகையை அழித்தற்கும், கொக்கு கூம்புமாறு கூம்பி, அது குத்துமாறு செயற்படும் காலமறிதல் வேண்டும். ஏலாப் பொழுதுகள் உலகு காத்தற்கும் பகை அழித்தற்கும் ஆகா.
இது ககரவருக்கத்து மடக்கு:
"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துதித் துதைதி துதைத்ததா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது"
|
|
|