அணியியல் - சொல்லணி - மடக்கு

377 

     [தத்தித் தாது ஊதுதி; தித்தித்த தாது எது? எத்தாது தித்தித்த தாது? தித்தித்தது
 எத்தாதோ?பாய்ந்து மகரந்தத்தை ஊதும் வண்டினை நோக்கி எத்தாது தித்தித்த
 தாது - என்று வினவியவாறு. இப்பாடல் தகரவருக்கத்து மடக்கு. [இவை
 பொருட்சிறப்பிலவாதல் காண்க.]

    "நின்னைநா னென்னென்னே னின்னைநா னென்னுன்னே
     நின்னைநா னின்னெனே னின்னானி - னின்னானான
     நாநாநா நின்னுநா னூனநீ னந்நானே
     நீநா னெனநீ நினை"

 எனவும் வரும். ஏனைய வந்துழிக் காண்க.

     [நின்னை யான் நீசெய்யும் செயல் என்ன என்று வினவுவேன் அல்லேன்;
 நின்செயல்களை யான் யாது காரணம் பற்றியும் நினையேன்; உன்னை நான்
 உன்னைச்சேர்ந்த எனக்கு இன்னாதன செய்பவனாக நின்தன்னலம் கருதுகின்றாய்
 என்று கூறமாட்டேன்; நின்னையே விரும்பும் நான் பலவித அச்சங்களையும்
 துன்பங்களையும் உறுவேன். என்னை நீத்துவிடும் நீ நானாக இருந்து நினைத்துப் பார்.
 நீ அதனை விடுத்து மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருக்கிறாய்!

     நின்னை நான் என்னென்னேன்; நின்னை நான் என் உன்னேன்; நின்னை நான்
 நின்னானின் இன்னானா நின் என்னேன்; நாநா நாம் ஊனம் நின் உன் நான்.
 நீ [த்துள்ள] நீ நான் என நினை; நீ நன்னானே - என்று பிரித்துப் பொருள் செய்க.

     இது மெல்லன வருக்கம். இதன்கண் நகரமும் னகரமும் ஆகிய ஈரெழுத்து
 வருக்கங்களே வந்துள்ளன.]

     ஈரெழுத்தான் வருவதற்குச் செய்யுள்:

    "மன்னுமான் மான்முன்ன மானமு மீனமா
     மின்னமா னேமுன்னு மானினி - மென்மென