378

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     மின்னுமா மென்னினா மன்னமுமா மென்மனனே
     மன்னுமா மானுமான் மான்"

 என வரும்.

     [மன்னுமால் மால்; முன்னம் மானமு ஈனமாம்; இன்ன நம்மானே முன்னும் மான்
 இனி மென்மென நாம் மின்னும் ஆம் என்னின் அன்னமும் ஆம். மானும் மான்
 (ஒக்கும்) மான் என் மனனே மன்னுமால்.

     எனக்குக் காமமயக்கம் உண்டாகாநின்றது. முன்பிருந்த பெருமைக் குணமும்
 குறைகிறது. இத்தகைய என்னால் கருதப்படும் மான்போன்ற தலைவி மின்னலைப்
 போல மறைவாள் எனினும் அன்னம் போன்ற நடை அழகையும் காட்டுகின்றாள்.
 மானினை ஒத்த இப்பெண் என் மனத்துள்ளும் தங்கியுள்ளாள்.

      இதன்கண் மகரமும் னகரமுமாகிய ஈரெழுத்துக்களே வந்துள்ளன.

     மூன்றெழுத்தான் வருவதற்குச் செய்யுள்:

    "மின்னாவான் முன்னு மெனினு மினிவேனில்
     மன்னா வினைவே னெனைவினவா முன்னான
     வானவனை மீனவனை மான வினைவென்வேன்
     மானவனை மானுமோ வான்"

 என வரும்.

     [மின்னி வானம் மழை பெய்யக் கருதும் எனினும், இளவேனில் காலத்து மனம்
 நிலைபேறின்றி வருந்தும் என் நலன் குறித்து வினவாத, யாவருக்கும் மேம்பட்ட,
 சேரனையும், பாண்டியனையும் மேம்பட்ட போர் வினையால் வென்ற வேலை உடைய
 மனுகுலத்து சோழனை வானம் ஒக்குமோ?

     மின்னா வான் முன்னும் எனினும், உளவேனிலில் மன்னாது இனைவேனாகிய
 என்னை வினவாத, வானவனையும் மீனவனையும் வெல்லும் வேலையுடைய முன்னான
 மானவனை வான் மானுமோ? - என்று பொருள் செய்க.