[மேகம் முழங்க இந்திரகோபப் பூச்சிகள் பரவின ; கடல் நீர் முழுதையும்
அகத்தியனே உண்டு உமிழ்ந்தான் ; வஞ்சியையும் ஆளும் சோழன் வாராது
ஒழிவானாக ; இவள் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய சிவந்த சிறிய அடியினை
உடையாள் -- என்ற இப்பாடலில், உள்ள நான்கு முற்றுச் சொற்றொடர்களும்
ஒன்றோடொன்று பொருடபொருத்தமின்றி இணைந்திருக்கும் வழுவை நோக்குக.
கள்ளுண்ட களிப்பில் "மன்மதனுடைய வடிவத்தில் நான் கலந்துவிட்டேன். கங்கை
மகனாகிய வீடுமன் வீமனுக்கு எதிரேதோற்று ஓடுவான் ; தாமரையின் மேல் அருகர்
பெருமை வெளிப்படத் தோன்றியுள்ளார் ; இவ்வூரிலுள்ள பனை மரங்கள்
குடிப்பதற்குக் கள்ளோடு பாலையும் பொழியும்" -- என்று ஒன்றோடொன்று
பொருத்தமில்லாத முற்றுச் சொற்றொடர்களை மொழியினும், கட்குடியர் கூற்றைக்
கொண்டு கூறுமிடத்துச் செய்யுளில் அமையும் என்பது.] 74