380

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [நடுங்குதலை உடைய மின்னல் தோன்றவே, காந்தள் பூக்குலைகளை
 வெளிப்படுத்தின; தொடுத்த மாலைகள் போலக் கொன்றை பொன் போன்ற பூக்களை
 மலரச் செய்தன; தொடி அணிந்த தோள்களும் இடப்புறம் துடித்தன; மயில்கள் ஆட,
 கானகம் புதிய தளிர்களைத் தோற்றுவித்துக் காட்டுகின்றது - என்று கார்காலம்
 கண்டு தலைவன் வருகை குறித்துத் தலைவி கூறியது இப்பாடல்.

     தடித்து - மின்னல். கடுக்கை - கொன்றை. இப்பாடலில் வல்லினமே வந்தவாறு
 காண்க.

    "வல்லினம் முழுதுறல் வல்லினப் பாட்டே."                     -மா. 271 

     மெல்லினப்பாடல்

    "மானமே நண்ணா மனமென் மனமென்னு
     மானாமான் மன்னா! நனிநாணும் - மீனமா
     மானா மினன்மின்னி முன்முனே நண்ணினு
     மானா மணிமேனி மான்"

     எனவும்,[பெருமை பொருந்திய யானைகளை உடைய தலைவனே! மின்னல் மின்னி
 நீ விடுத்த தூதாகத் தலைவ முன்னேவந்து காட்சி வழங்கினாலும், அதனால் நின்
 விரைந்துவரல் குறித்து ஆற்றாது, என் மனம் மானமில்லாத மனம் என்றும், என் நாணும்
 குறைகிறது என்றும், தன் ஒப்பில்லா அழகிய மேனியை உடைய தலைவி
 ஆற்றாமையால் கூறிக்கொண்டிருந்தாள் - என்று வினைமுற்றி மீண்டுவந்த
 தலைவனிடம் தோழி கூறியது.

     மனம் என்மனம், நனி நாணும் ஈனம்ஆம், ஆனா மின்னல் மின்ன, மான
 (ஒப்பில்லாத) மணி மேனி - என்று பிரித்துப் பொருள் கொள்க.
     இது மெல்லினமே அமையப் பாடப்பட்டவாறு காண்க.]

    "மெல்லினம் முழுதுறல் மெல்லினப் பாட்டே"                   -மா. 272